மக்களே அவதானம்..! நாளை தொடக்கம் கட்டுப்பாடுகள் இறுக்கம், எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்..
இலங்கையில் நாளை அதிகாலை 4 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், சமூக இடைவெளியை வேணாதவிடத்து கைது செய்யப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் பொலிஸாருக்கு இது தொடர்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே,
பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயமாக பேணுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கூறினார்.