திருமண நிகழ்வுகளில் 100 விருந்தினர்கள் கலந்துகொள்ளலாம்..! புதிய திருமண நடைமுறைகளை அறிவித்தது சுகாதார அமைச்சு..
திருமண நிகழ்வுகளின்போது 100 விருந்தினர்கள் கலந்த கொள்ளலாம் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.
திருமண நிகழ்வுகளில் 25 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
விருந்தினர்கள் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் திருமண மண்டபங்களில் 40 வீதத்திற்கும் குறைந்த ஆசனங்களே போடப்படவேண்டும்.
சிறிய மண்டபங்களிலும் 40 வீதமான ஆசனங்களே போடப்படவேண்டும். இந்த அறிவித்தலை சுகாதார அமைச்சு விடுத்தள்ளது.
மேலும் விருந்தினர்களின் இருக்கைகளுக்கிடையில் 1 மீற்றர் இடைவெளி இருக்கவேண்டும். மணமகன், மணமகள் உள்ளிட்ட அனைவரும்
முக கவசங்களை அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.