மக்களே அவதானம்..! 24ம்,25ம் திகதிகளில் நாடு முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கை, 900 சோதனை சாவடிகள்..

ஆசிரியர் - Editor
மக்களே அவதானம்..! 24ம்,25ம் திகதிகளில் நாடு முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கை, 900 சோதனை சாவடிகள்..

நாளை நாடு முழுவதும் நாளை இரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் நாடு முழுவதும் 900 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோகஹன தெரிவித்துள்ளார். அத்தோடு ரம்ழான் தினம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வீடுகளுக்குள் பண்டிகையை கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார். 

இதனை மீறி ஒன்று கூடுவார்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Radio