வடகிழக்கில் மிக திறமையான கிரிக்கெட வீரர்கள் உள்ளனர்..! இதுவரை காலமும் கண்டுகொள்ளவில்லை, இனியாவது கண்டுகொள்ளுங்கள்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் மிக திறமையான கிரிக்கெட வீரர்கள் உள்ளனர்..! இதுவரை காலமும் கண்டுகொள்ளவில்லை, இனியாவது கண்டுகொள்ளுங்கள்..

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் மிக திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய வசதி, வாய்ப்புக்கள் கடந்தகாலங்களில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அது பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். 

மேற்கண்டவாறு இலங்கையின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில், 

வட மாகாணத்தில் 26 பாடசாலைகள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கென முழுமையான மைதானத்துடன் ஓரு ஆடுகளம் மாத்திரமே உள்ளது. வடக்கு கிழக்கை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் பின்னர் அங்கு திறமையான சிறுவர்கள், 

சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இன்னும் அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே நான் நினைக்கின்றேன். 

என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் போட்டித் தொடர்களை நடத்திய போது ஆற்றல்கள் மிக்க பல வீரர்கள் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்ததது எனினும், 

அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளது என இந்த கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட, இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். சங்கா கூறியதைப் போல் 

நானும் வடக்கிற்கு சென்றபோது இவற்றை அவதானித்தேன். வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் போதாது அங்கிருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கப்பட வேண்டும், 

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்என இந்தக் உரையாடலில் பங்குகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு