SuperTopAds

கத்திகள், கொட்டன்கள், துப்பாக்கிகளுடன் படையினர்..! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க நேற்று படையினர் செய்தது என்ன தெரியுமா..?

ஆசிரியர் - Editor I
கத்திகள், கொட்டன்கள், துப்பாக்கிகளுடன் படையினர்..! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க நேற்று படையினர் செய்தது என்ன தெரியுமா..?

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் நினைவுகூரப்பட்ட நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள், அரசியல்வாதிகள் முல்லைத்தீவுக்குள் நுழைவதை படையினர் மற்றும் பொலிஸார் கெடுபிடியாக தடுத்து, பலரை திருப்பி அனுப்பினர். 

மேலும் கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் கொட்டன்களுடன் போர் காலத்தை ஒத்ததாக படையினர் வீதிகளில் களமிறக்கப்ப ட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், நேற்றய தினம் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தி ல் கடுமையான கெடுபிடிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் ஏற்படுத்தியிருந்தனர். 

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக 11ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மக்கள், அரசியல்வாதிகள் முல்லைத்தீவுக்குள் நுழைவதை தடுக்க 

புதிது புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு ஆட்கள், வாகனங்கள் குறித்த பதிவுகளை பெற்று எங்கு செல்கிறீர்கள்? ஏன் செல்கிறீர்கள்? என்ற விசாரணைகளுக்கு பின்பே தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து 

காலை 7 மணிக்கு புறப்பட்ட ஊடகவியலாளர்கள் எழுதுமட்டுவாள், இயக்கச்சி, ஆனையிறவு, நெத்தலி ஆறு, விசுவமடு, கைவேலி- திம்பிலி, இரட்டைவாய்க்கால் என 7 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், எங்கு செல்கிறீர்கள்? ஏன் செல்கிறீர்கள்?என்ற கேள்விகளுக்கு பதிலளித்து சுமார் 4 மணித்தியாலங்களின் பின்பே 

முள்ளிவாய்க்காலுக்கு சென்றடைய முடிந்தது. 7 சோதனை சாவடிகளிலும் போர் காலத்தை ஒத்ததாக இராணுவத்தினர் கத்திகள், கொட்டன்கள், துப்பாக்கிகளுடன் நின்று மக்களை அச்சுறுத்தும் தோரணையில் நடந்து கொண்டதுடன், முல்லைத்தீவுக்கு செல்பவர்களைநீண்டநேரம் காக்க செய்ததையும் அவதானிக்க முடிந்தது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நெத்தலி ஆறு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து திருப்பி அனுப்பபட்டனர். அதேபோல் முன்னாள் முதலமைச்சர், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கேரதீவு பகுதியில் வைத்து திருப்பி அனுப்பட்டனர். 

இவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலரும் திருப்பி அனுப்பட்டதுடன், நினைவேந்தலுக்கு போகிறீர்களா? என படையினர் அச்சுறுத்தியதாக மக்கள் கூறுகின்றனர்.