படையினர் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல் மிக உணர்வுபூர்வமாக..!
2009ம் ஆண்டு இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் பொலிஸ், இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்றிருக்கின்றது.
இன்று காலை பத்து முப்பது மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த இலட்சுமணன் பரமேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு
ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டதுநாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இருப்பினும் போலீசார் ராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் நெருக்கடிகளுக்கு மத்தியில்
மக்கள் ஒன்று கூடுகின்ற நிலையில் அவர்களுக்கு பல்வேறு சவால்களாக படையினர் போலீசார் செயற்ப்பட்டபோதும் உரிய தரப்புகளை அணுகி சுகாதாரப் பிரிவினர் இங்கே வருகை தந்து அவர்கள் சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு
அதை உரிய முறையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது இந்த நிகழ்வில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் , கந்தையா சிவநேசன் , மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்
ஆண்டியையா புவனேஸ்வரன் , மற்றும் முன்னாள் யாழ் மாநகர மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .