முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை..! பாதுகாப்பு அமைச்சு கருத்து, இறந்தவர்களின் உறவினர்கள் மட்டும் பொலிஸ் அனுமதியுடன் நினைவுகூரலாம்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை..! பாதுகாப்பு அமைச்சு கருத்து, இறந்தவர்களின் உறவினர்கள் மட்டும் பொலிஸ் அனுமதியுடன் நினைவுகூரலாம்..

தமிழீழ விடுதலை புலிகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்த அனுமதியில்லை. பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக அஞ்சலி செலுத்த விரும்பினால் பொலிஸாருடைய அனுமதியுடன் செய்யப்படவேண்டும். என பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது. பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்படும் விடுதலைப்புலிகளை 

அனுஷ்டிக்கும் எந்த நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறக்கூடாது. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படக்கூடாது. வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிகழ்வுகளை நடத்த ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய 

புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அல்லது யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றால் அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினர் 

குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அறிவித்துள்ளது. இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுமதியில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு