மக்களே அவதானம் அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் “அம்பான்”..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானம் அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் “அம்பான்”..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

திருகோணமலையிலிருந்து தென்கிழக்கு கடற்பகுதியில் உருவாகியிருக்கும் “அம்பான்” தாழமுக்க நிலை அடுத்த 12 மணித்தியாலங்களில் புயலாக மாறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்கள் உள்ளடங்கலாக சுமார் 10 மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வடக்கு திசையில் இருந்து வடமேல் திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றதால் நாளை தொடக்கம் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் 

எனவும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இப்போதுவரையில் எட்டு மாவட்டங்களில் 775 குடும்பங்களை சேர்ந்த 2,666 பேர் 

பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன் கனமழை காரணமாகவும் மண்சரிவு காரணமாகவும் இருவர் உயிரிழந்துள்ளதுடன் முழுமையாக 9 வீடுகளும், பகுதி அளவில் 473 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. தெற்கின் பல பகுதிகள் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் மீண்டும் மழை அதிகரிக்கும் 

காரணத்தினால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதி தொடர்ந்தும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் அவதானமாக இருக்க வளிமண்டலவியல் திணக்களம் கேட்டுள்ளது. 

அதேபோல் மின்னல், கனமழை, காற்று தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு