விஜயை கை கொடுத்து தூக்கிய விக்ரம் கடைசியில் நடந்த உண்மை அதிர்ச்சியில் ரசிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென கொரானா பாதிப்பால் அதன் வெளியீட்டு தேதி தள்ளிச் சென்றது.
தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் நடந்துவருவதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ உடன் சேர்ந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார் தயாரித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் லலித்குமார் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தையும் தயாரித்து வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் லலித் குமார் அதற்காக விநியோகஸ்தர்களிடம் முன்பணம் வாங்கி உள்ளதாக செய்திகள் கிடைத்தது. மாஸ்டர் படத்தின் வியாபாரம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆன நிலையில் விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்டதாக செய்திகள் வெளியானது.
மாஸ்டர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு தன்னுடைய கோப்ரா படத்தையும் ஓரளவு குறைந்த விலைக்கு தருவதாக வாக்குக் கொடுத்துள்ளாராம். இதனால் விநியோகஸ்தர்கள் காட்டில் அடைமழை தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அதுமட்டுமில்லாமல் லலித் குமாரின் இந்த சுமூகமான முடிவு அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகும்போது வினியோகஸ்தர்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாதாம். இதுதான் ராஜதந்திரம் என்கிறார்களாம்.