சிம்புவுக்கு ரூட் விடும் பிந்து மாதவி தாறுமாறாக கிழித்து கலாய்த்த ரசிகர்கள் அப்செட்டில் சிம்பு

ஆசிரியர் - Admin
சிம்புவுக்கு ரூட் விடும் பிந்து மாதவி தாறுமாறாக கிழித்து கலாய்த்த ரசிகர்கள் அப்செட்டில் சிம்பு

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள நடிகர்கள் நடிகைகள் தாங்கள் வழக்கத்துக்கு மாறாக வீட்டு வேலைகள் செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் பல நடிகர்கள் நடிகைகளும் இதனை லைக் செய்துள்ளனர். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் காமெடி நடிகர் விடிவி கணேஷ் சிம்புவிடம், விரைவில் கல்யாணம் செய்துகொண்டால் மனைவி சமையல் செய்வாரே என கூறுவதை போலவும், மனைவி என்பவள் வேலைக்காரியாக? என அவரிடம் வாக்குவாதம் செய்வதை போலவும் உருவாகி இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சந்து கேப்பில் சிந்து பாடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், அதை பிந்து மாதவி விஷயத்தில் தான் உண்மையாக பார்க்கிறோம்.

சிம்புவின் சமையல் வீடியோவை பார்த்த பிந்து மாதவி, விரைவில் உங்களது மனைவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் சந்து கேப்பில் சிம்புவுக்கு ரூட் போடுகிறார் என அவரை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்.

Radio
×