மக்கள் பீதியடையவேண்டாம்..! சிறந்த பாதுகாப்பு திட்டமிடலால் வடமாகாணம் பாதுகாப்பாக உள்ளது..

ஆசிரியர் - Editor I
மக்கள் பீதியடையவேண்டாம்..! சிறந்த பாதுகாப்பு திட்டமிடலால் வடமாகாணம் பாதுகாப்பாக உள்ளது..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களும் திட்டமிட்ட மிக சிறந்த பாதுகாப்பு முறைகளால் தற்போதும் பாதுகாப்பாக உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, 

யாழ்.போதனா வைத்தியசாலை நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் பேரானந்தராஜா ஆகியோர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் எந்த இடத்திலும் 

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தி மீண்டும் சோதனை செய்யும் நடைமுறை இல்லை. ஆனால் வடமாகாண சுகாதார துறையினரின் 

உச்ச பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அரியாலையை சேர்ந்த 5 பேருக்கு தொற்று குறைந்தளவில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் தொற்று அபாயம் ஏற்பட்டவுடனேயே, 

உச்ச பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டதுடன், மாகாண சுகாதார பணிப்பாளர், மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், சுகாதார துறையினர் உச்ச அளவில் பாதுகாப்பு 

நடைமுறைகளை ஒழுங்குபடுத்தியதுடன், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் பின்னணி ஆகியவற்றை ஆராய்ந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதனால் சமூக மட்டத்தில் தொற்று தடுக்கப்பட்டது. தற்போது எமது பிரதேசம் பாதுகாப்பாக உள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு