தமிழர்களின் மிகுதி காணிகளையும் பறிக்கும் “மாயபுர” திட்டத்தை வலுப்படுத்தவே மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நியமனம்..!
தமிழ் மக்களுக்கு சொந்தமான 4368 ஏக்கர் காணி மகாவலி L வவயம் ஊடாக அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேலும் ஒரு தொகுதி காணிகளை அபகரித்து “மாயபுர” திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஓய்வு பெற்ற இராணு வ மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 4368 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி மகாவலி L வவயம் ஊடாக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. 1984ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் காணிகளை இழந்த 805 குடும்பங்களை சேர்ந்த மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தரவுகள் இவையாகும்.
இதற்கிடையில் 2018.06.25ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகள் பிரகாரம், சுமார் 2919 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான தரவுகள் உள்ளன. இந்நிலையில் மேலதிகமா க “மாயபுர” என்ற திட்டத்தின் கீழ் மேலும் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை
மஹிந்த அரசாங்கம் தீர்மானித் திருந்தது. அந்த திட்டத்தை இன்று அவருடைய சகோதரன் கோட்டபாய தனது ஆட்சியில் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே மகாவலி அமைச்சில் சிவில் நிர்வாக அதிகாரிகள் இருந்தபோதே காணி உரிமையாளர்களிடம் உறுதிகள் இரு க்கையில் மயில்குளம் பகுதியில் வைத்து
சிங்கள மக்களுக்கு போலி உறுதிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டதுடன், பல காணிகள் அபகரிப்பு செய்யப்பட்டது. அவ்வாறான நிலையில் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதால், அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது நடக்காத ஒன்று என்பதுடன்,
இருக்கும் காணிகளையும் இழக்கும் நிலை உருவாகப் போகின்றது. இந்த பேராபத்தை தடுப்பதற்கு பொறுப்புவாய்ந்த ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். மக்களும் விழிப்பாக இருக்கவேண்டும். என்பதுடன் மகாவலி அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டது,
தமிழர்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்கான சமிக்ஞை என்பதே உண்மை என்றார்.