மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தளர்வு ஆபத்தானது..! குறைந்தபட்சம் கண்காணிப்பு பொறிமுறையாவது அவசியம்..

ஆசிரியர் - Editor I
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தளர்வு ஆபத்தானது..! குறைந்தபட்சம் கண்காணிப்பு பொறிமுறையாவது அவசியம்..

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பூரணமாக தளர்த்தப்படுவது பொருத்தமான ஒரு நடவடிக்கையல்ல. 

என கூறியிருக்கும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தளர்த்தும் திட்டம் இருப்பின் குறைந்தபட்சம் காண்காணிப்பு பொறிமுறையாவது உருவாக்கப்படவேண்டும். 

எனவும் கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றிருந்தது. 

இதன்போது மாவட்டங்களுக்கிடையிலான கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக பேசப்பட்டிருந்தது. இதன்போது மே-11ம் திகதிக்கு பின்னர் அது குறித்து பேசும் அவசியம் இல்லை என பிரதமர் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. 

குறித்த விடயம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது மாவட்டங்களுக்கிடையில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. 

அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவது உகந்தல்ல. மேலும் அது ஆபத்தானதும் கூட. குறிப்பாக தொற்று அபாயம் உள்ள பகுதியில் இருந்து ஒருவர் எமது மாவட்டங்களுக்குள் நுழைந்தால் 

அவரை கண்காணிக்க முடியாமல்போகும். அவர் எங்கு சென்றார்? யாரை சந்தித்தார்? என அறிய முடியாது. அது கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு தடையாகும். 

இதேவேளை மறுக்க ம் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டப்பாடுகளினால் கல்வி நடவடிக்கைகள், வர்த்தக நடவடிக்கைள், போன்ற பல செயற்பாடுகளுக்கு தடையாக அமையும். 

ஆகவே கட்டுப்பாடுகளை நீக்கவேண்டிய அவசியமும், நீக்குவதால் ஆபத்தும் உள்ளது. எனவே ஆபத்திலிந்து பாதுகாப்பு பெறுவதுடன், அவசியமான செயற்பாடுகளை செய்ய இடமளிப்பதாகவும் 

ஒரு பொறிமுறை நிச்சயமாக அவசியம். அது மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையாக இருப்பது அவசியம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு