SuperTopAds

ஜகார்த்தாவில் இலங்கையர் மூவருக்கு முதலிடங்கள்

ஆசிரியர் - Admin
ஜகார்த்தாவில் இலங்கையர் மூவருக்கு முதலிடங்கள்

இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்­தாவில் நடை­பெற்­று­வரும் ஆசிய விளை­யாட்டு விழாவை நோக்­கிய பய­ணத்­திற்­கான பரீட்­சார்த்த மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்கை வீர, வீராங்­க­னைகள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுள்­ளனர்.

ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 10.30 செக்­கன்­களில் நிறைவு செய்த வினோஜ் சுரஞ்­சய டி சில்வா வெற்­றி­பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இவர் தகு­திகாண் சுற்றில் 10.28 செக்­கன்கள் என்ற நேரப் பெறு­தியைப் பதிவு செய்­தி­ருந்தார்.

100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இந்­தோ­னே­ஷி­யாவின் முஹம்மத் ஸோஹ்ரி இரண்டாம் இடத்­தையும் இந்­தி­யாவின் தாசன் வடி­வேலு மூன்றாம் இடத்­தையும் பெற்­றனர்.ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்­டியை 46.83 செக்­கன்­களில் ஓடி முடித்த தாருஷ தனஞ்­சய முதலாம் இடத்தைப் பெற்றார். இப் போட்­டியில் மற்­றொரு இலங்­கை­ய­ரான டிலிப் ருவன் மூன்றாம் இடத்தைப் (47.67 செக்.) பெற்றார். இந்­தி­யாவின் ஜித்து பேபி (46.88 செக்.) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

பெண்­க­ளுக்­கான ஈட்டி எறி­தலில் 55.13 மீற்றர் தூரத்தைப் பதி­வு­செய்த டில்­ஹானி லேக்­கம்கே தங்கப் பதக்­கத்தை வென்றார்.பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வெற்­றி­பெ­றக்­கூ­டி­யவர் என பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட விதூஷா ல­க் ஷானி 13.28 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்­கத்­தையே வென்­றெ­டுத்தார். ஹஷினி பால­சூ­ரி­ய­வுக்கு வெண்­கலப் பதக்கம் (12.98 மீற்றர்) கிடைத்­தது.
ஆண்­க­ளுக்­கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஆர்.எம்.எஸ். புஷ்­ப­கு­மா­ர­வுக்கு மூன்றாம் இடம் (14 நி. 34.86 செக்) கிடைத்­தது.

ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறி­தலில் சம்பத் ரண­சிங்க (75.39 மீற்றர்) இரண்டாம் இடத்­தையும் பெண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் உபமாலிக்கா ரத்னகுமாரி (54.89 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.