தமிழர் நிலம் விழுங்க தொடங்குகிறாரா ஜனாதிபதி கோட்டா..? மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி..

ஆசிரியர் - Editor I
தமிழர் நிலம் விழுங்க தொடங்குகிறாரா ஜனாதிபதி கோட்டா..? மகாவலி அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி..

இரு இராணுவ முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் அமைச்சுக்களின் புதிய செயலாளர்களாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

இதில் குறிப்பாக மகாவலி அமைச்சுக்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மகாவலி அதிகாரசபை வடகிழக்கு மாகாணங்களின் எல்லையில் தமிழர்களுக்கு சொந்தமான 

பெருமளவு நிலப்பகுதியை குடியேற்றங்களால் அபகரிக்கும் நிலையில், அந்த அமைச்சுக்கு செயலாளராக ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதன் ஊடாக அரசாங்கம் அபகரிப்பை தொடரவுள்ளதா?

என கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சுக்களின் புதிய செயலாளர்களாக, 

திருமதி எஸ்.எம். மொஹம்மட் – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு

ஜே.ஜே ரத்னசிறி – பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

ஸ். ஹெட்டியாரச்சி – சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு

எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன – மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு

திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன – உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ். பெரேரா – மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு

மேஜர் ஜெனரல், மருத்துவ நிபுணர் சஞ்சீவ முனசிங்க – சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு