நாட்டு மக்களுக்கு பொது அறிவிப்பு..! இந்த 7 அறிவித்தல்களையும் பின்பற்றுங்கள், படையினர் மற்றும் பொலிஸார் திடீர் சோதனை நடத்துவர்.
இலங்கை நாளை வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் அரச ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள், பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். என்பது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண 7 முக்கிய விடயங்களை வழங்கியிருக்கின்றார். இந்த அறிவுறுத்தல்கள் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.
இந்த விடயங்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக ஆங்காங்கே இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த 7 விடயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, சுருக்க வடிவில்.
1- நாளை முதல் பணிக்கு செல்பவர்கள் மின்னணு ஆவணம் அல்லது பணியிட அடையாள அட்டையை வைத்திருத்தல் கட்டாயம்.
2- சொந்த வாகனங்களில் பணிக்கு செல்லும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவும், தனியார் ஊழியர்கள் காலை 8.30 மணியில் இருந்து 10 மணிக்குள்ளும் பணியிடங்களுக்கு செல்ல வேண்டும்.
3- பணியிடத்தில் இருந்து அரச ஊழியர்கள் 3 மணி முதல் 4 மணிக்குள்ளும், தனியார் ஊழியர்கள் 4 மணி முதல் 5 மணிக்குள்ளும் வீடு திரும்ப வேண்டும்.
4- தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து முச்சக்கரவண்டி மற்றும் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களில் பயணிக்க அனுமதி.
5- கட்டுமான தளங்கள், சலூன்கள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்கள் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தமது பணியை தொடங்க முடியும்.
6- ஹோட்டல்களை இயக்க முடியும், ஆனால் உணவங்களுக்கான அனுமதி கிடையாது. சமைத்த உணவு, தேநீர், பழச்சாறு விற்பனை கடைகள், ஜிம்கள் மற்றும் இரவு கிளப்களுக்கு அனுமதி கிடையாது.
7- தே.அ.அ. இறுதி இலக்க முறையில் நடந்து கடைகளுக்கு செல்ல அனுமதி.