மக்களே அவதானம், சுகாதார அமைச்சு எச்சரிக்கை..! பாதுகாப்பு மக்களின் கைகளில், நாடு இப்போதும் அபாயத்திற்குள்ளே உள்ளது..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானம், சுகாதார அமைச்சு எச்சரிக்கை..! பாதுகாப்பு மக்களின் கைகளில், நாடு இப்போதும் அபாயத்திற்குள்ளே உள்ளது..

இலங்கை வழமைக்கு திரும்புவதால் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டதாக கூற முடியாது என கூறியிருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க கொரோனா அபாயம் நீங்குவதற்கு நீண்டகாலம் எடுக்கும் எனவும் கூறியுள்ளார். 

கொரோனா எதிர்ப்பு செயலணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கை நாளை வழமைக்கு திரும்புகின்றது. 

வழமைக்கு திரும்பினாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை உதாசீனம் செய்யாதீர்கள். நாட்டிலுள்ள சகல கட்டமைப்புக்களும் நாளை தொடக்கம் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியமாகின்றது. மக்கள் சுவாச நோய்கள் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும். 

நாடு முழுவதும் 30 சிறப்பு மருத்துவமனைகள் அமைந்திருக்கின்றன என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு