நாளை வழமைக்கு திரும்புகிறதா இலங்கை..? விசேட வர்த்தமானி இன்று வெளியாகும், 4 மாவட்டங்களுக்கு மட்டுப்பாடு, தொற்று அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
நாளை வழமைக்கு திரும்புகிறதா இலங்கை..? விசேட வர்த்தமானி இன்று வெளியாகும், 4 மாவட்டங்களுக்கு மட்டுப்பாடு, தொற்று அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை..!

மே- 11ம் திகதி நாளை நாட்டில் இயல்புநிலை திரும்பவுள்ள நிலையில் மக்கள் நடந்து கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றபோது அங்கே தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இது இலங்கையில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலக நாடுகளுக்கும் இதுதான் ஆபத்து. ஆனாலும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு பெறலாம். 

இது குறித்து சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவிருக்கின்றது. அந்த வர்த்தமானி அறிவித்தலானது எதிர்வரும் நாட்களில் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சட்டரீதியான அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். 

தற்போதுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது அவசியம் எனவும் கூறியுள்ளார். இதேவேளை கொழும்பு, ஹம்பகா, புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதாகவும் மிகுதி 21 மாவட்டங்களிலும் 9 மணித்தியால ஊரடங்கு தளர்வு என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அபாய வலயங்களாக உள்ள 4 மாவட்டங்களிலும் அடுத்த 14 நாட்களில் தொற்றுக்குள்ளான ஒருவரும் அடையாளம் காணப்படாதவிடத்து அந்த மாவட்டங்களும் வழமைக்கு திரும்பலாம் என கூறப்படுகின்றது. இதேவேளை 5700 இ.போ.ச பேருந்துகள் நாளை தொடக்கம் பணியில் ஈடுபடவுள்ளன. 

இவை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே சேவையில் ஈடுபடவுள்ளன. மேலும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் அரசினால் அறிவிக்கப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு