தலைமுடி மட்டும் வெட்டலாம். தாடி, மீசை வெட்டவோ, வழிக்கவோ தடை..! கடுமையான நிபந்தனை விதித்த சுகாதார அமைச்சு..

ஆசிரியர் - Editor I
தலைமுடி மட்டும் வெட்டலாம். தாடி, மீசை வெட்டவோ, வழிக்கவோ தடை..! கடுமையான நிபந்தனை விதித்த சுகாதார அமைச்சு..

இலங்கையில் உள்ள சலூன்கள், அழகுகலை நிலையங்களை திறக்க அனுமதிப்பதற்கு மு ன் அவை பின்பற்றவேண்டிய ஒழுங்குகள் சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்கவினால் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு அனுப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம் எந்த சலூன்களிலும், அழகுகலை நிலையங்களிலும் தாடி மற்றும் மீசை வெட்டுவதற்கு அனுமதி இல்லை. தமது நிலையங்களில் முடி மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வெட்ட முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

இந்த வழிகாட்டுதல்களானது நாட்டின் அனைத்து சிகை அலங்கார மற்றும் அழகு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் ஜெனரல் லக்ஷ்மன் கமலத் கூறினார். அந்த உத்தரவுகளின் படி சிகை அலங்கார ஊழியர்கள் முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.

தாடி மற்றும் மீசை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உதடுகள் மற்றும் வாயுடன் தொடர்புகளை தடுக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் குறுகிய நியமனங்கள் மட்டுமே பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்படும் எந்த துணியையும் இன்னொருவருக்கு மீண்டும் பயன்படுத்த முடியாது.அனைத்து ஊழியர்களும் N95 முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் கூறுகின்றன, அதே நேரத்தில் சிகையலங்கார மற்றும் அழகு நிலயைங்களை 

திறப்பதற்கு முன்பும் பின்பும் கிருமி நீக்கம் செய்யப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையத்தின் கழிவுகளை பைகளில் சேகரித்த பின்னர் அவற்றை அழிக்கும்படியும் பணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து நிலையங்களின் நுழைவாயிலில் 

கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நிலையத்தின் அனைத்து ஊழியர்களிடையேயான தினசரி வெப்பநிலையை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிகையலங்கார மற்றும் அழகு நிலையங்களை 

மீண்டும் திறக்க விரும்பும் உரிமையாளர்கள் குறித்த பகுதிக்கான சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம் அனுமதிக்கான கோரிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைக்கு இணங்க சிகையலங்கார மற்றும் அழகு நிலைய வளாகங்கள் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதிக்கப்படுவதுடன்,

பின்னர் பாதுகாப்பு நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு