சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் சிறப்பு நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்..! பொதுமக்களே அவதானம், பாதுகாப்புதுறை எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் சிறப்பு நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்..! பொதுமக்களே அவதானம், பாதுகாப்புதுறை எச்சரிக்கை..

25 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவிருக்கும் நிலையில், 25 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறுவோரை கைது செய்யும் சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார். இது குறித்து ஊடகவியலாளர்களு க்கு கருத்து தொிவிக்கையில், இன்று இரவு தொடக்கம் சிறப்பு நடவடிக்கை சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டி ருக்கின்றது. இதன் மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர், 

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் கைது செய்யப்படவுள்ளனர். தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 11ம் திகதி அதிகாலை வரையில் அமுலில் இருக்கும். இந்த காலப்பகுதியிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அனைவரும் மதித்து நடக்கவேண்டும். பண்டிகைகாலம் என்றாலும் மக்கள் தமதும், சமுகத்தினதும் 

பாதுகாப்புக்காக வீடுகளிலேயே இருக்கவேண்டும். எனவும் அவர் கேட்டிருக்கின்றார். இதேவேளை திட்டமிட்டபடி 11ம் திகதி நாடு வழமைக்கு திரும்பும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியிருக்கின்றார். இன்று ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு