யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் மீண்டும் பரிசோதனை ஆரம்பம்..! ஆபத்து என கூறப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் மீண்டும் பரிசோதனை ஆரம்பம்..! ஆபத்து என கூறப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை நிறுத் தப்பட்டமைக்கு ஒரு சிலரின் பொறுப்பற்ற விமர்சனங்கள் காரணமல்ல. என கூறியிரு க்கும் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி எஸ்.ரவிராஜ், 

திருத்த பணிகளுக்காகவே பரிசோதனை நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்ததாகவும், வி மர்சனங்களை முன்வைக்கும் அல்லது வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையி ல், ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன. 

தற்போது அவை சரி செய்யப்பட்டு இன்றிலிருந்து பரிசோதனைகள் இடம்பெறுகின் றன. ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப கூடும். அவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

எனவும் குறிப்பிட்டார்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை 

உட்பட இந்த இரு இடங்களிலும் பரிசோதனைகள் இடம்பெறும். அதில் மக்கள் எவ்வித குழப்பமும் அடையத்தேவையில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு