ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும்..! அரசு இறுக்கம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும்..! அரசு இறுக்கம்..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டு ம்? என்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் பவி த்திரா வன்னியாராச்சி தலமையில் இன்று காலை கூடியுள்ளது. 

இந்த ஒன்றுக்கூடலின் போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு உத்தரவு 

தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சமூக இடைவெளியை எவ்வாறு பேண வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.அத்துடன் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் 

மீண்டும் காணப்பட்டால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் அனைத்து சுகாதார பிரிவுகளையும் பலமிக்கதாக மாற்றுவதற்கு வழிமுறை ஒன்றினையும் தயார் செய்யுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், கிராமிய மற்றும் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளில் கடமையில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தட்டுபாடின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக 

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு