யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலவரம் என்ன? பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலவரம் என்ன? பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்..!

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 47 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்று இல்லை. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்த பரிசோதனை நடந்துள்ளது. 

இதன்படி 

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 4 பேர்.

* காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலை - ஒருவர்

* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - ஒருவர்.

* பொது வைத்தியசாலை வவுனியா - 8 பேர்.

* முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையம் - 30 பேர்.

உள்ளிட்ட 47 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு