SuperTopAds

நடிகர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும்!! -தயாரிப்பாளர் கோரிக்கை-

ஆசிரியர் - Editor III
நடிகர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும்!! -தயாரிப்பாளர் கோரிக்கை-

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமை காரணமாக சினிமா துறையில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய, நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் கோரியுள்ளார்.

கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஸ்டம் ஏற்பட்டு உள்ளது. 

ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மலையாள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேரள முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் குமார் வற்புறுத்தினார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தையும், நடிகர் வெங்கடேசின் அண்ணனுமான பிரபல தயாரிப்பாளர் சுரேஸ் பாபுவும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் தெலுங்கு பட உலகில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பல நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன. அதுபோல் தெலுங்கு சினிமாவிலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படும்” என்றார்.