அபாய எச்சரிக்கை..! வடமாகாண மக்களே அவதானம், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்..

ஆசிரியர் - Editor I
அபாய எச்சரிக்கை..! வடமாகாண மக்களே அவதானம், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்..

வடக்கில் 3 மாவட்டங்கள் உள்ளடங்கலாக 5 மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக் கை விடுக்கப்பட்டிருப்பதுடன், இந்த மாவட்டங்களில் 41 - 54 பாகை செல்சி யஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இதன்படி முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், அனுராதபுரம் ஆகிய மாவட்ட ங்களிலேயே வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் தொடக்கம் 54 பாகை செல்சியஸ் வ ரையில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

மேலும் கிளிநொச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 32 பாகை செல்சியஸ் தொடக்கம் 41 பாகை செல்சியஸ்வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தீவிர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.மாவட்டத்தில் 27 பாகை செல்சியஸ் 

தொடக்கம் 32 பாகை செல்சியஸ் ஆக வெப்பநிலை இருக்கும் எனவும் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், சிறியவர்கள், நோயாளிகள் அவதானமாக இருக்கவேண் டும் எனவும், வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும், நீரை நிறைவாக அருந்துமாறும்

வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு