ஒலிம்பிக் பனிச்சறுக்கு விளையாட்டின் போது விபத்திற்குள்ளான வீரர்!

ஆசிரியர் - Editor II
ஒலிம்பிக் பனிச்சறுக்கு விளையாட்டின் போது விபத்திற்குள்ளான வீரர்!

தென் கொரியாவில் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.


இந்த ஒலிம்பிக் போட்டியில் Snowboarding என்ற விளையாட்டில் பங்கேற்ற ஜப்பானை சேர்ந்த வீரரான 16 வயதுடைய Yuto Totsuka என்பவர் தடுமாறி விழுந்துள்ளார்.


Halfpipe என அழைக்கப்படும் அமைப்பில் Snowboard இன் உதவியுடன் பனிச்சறுக்கு செய்யும் போது குட்டிக்கரணம் அடிக்க முயன்ற அவர் எதிர்பாராத விதமாக பனிக்கட்டி விளிம்பில் மோதி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் இடுப்பு பகுதியில் அவருக்கு பலத்த அடி பட்டுள்ளது.


வலியால் துடித்த வீரர் அசைய முடியாமல் விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவ குழு அவருக்கு முதலுதவி அளித்து மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு