விளையாடிக் கொண்டிருந்த 2 வயதான சிறுவன் பலி..! பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த விபரீதம்..
விளையாடிக் கொண்டிருந்த 2 வயதான சிறுவன் நீர் நிறைந்த வாளிக்குள் தவறி விழு ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை கொக்கட்டிச்சோலை- உண்ணிச்சி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையே இவ்வாறு நீர் சேமிக்கும் வாளிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.குழந்தையின் தலையில் வாளியின் அடிப்பாகத்தில் சிக்குண்ட நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்திமலை
காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.