50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளை கேட்கிறது இராணுவம்..! வடக்கில் இத்தனை தனிமைப்படுத்தல் நிலையங்கள் எதற்கு..?

ஆசிரியர் - Editor I
50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளை கேட்கிறது இராணுவம்..! வடக்கில் இத்தனை தனிமைப்படுத்தல் நிலையங்கள் எதற்கு..?

கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்காக வடமாகாணத்தில் 50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளை இராணுவம் கேட்டிருப்பதாக மாகாண கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

வடமாகாண கல்வி அமைச்ணின் கீழ் உள்ள படைமுகாம்களில் இருந்து விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காகவெனத் தெரிவித்தே குறித்த பாடசாலைகள் இவ்வாறு படையினரால் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு படையினரால் கோரப்பட்ட பாடசாலைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 06 பாடசாலைகளும் , மன்னார் கல்வி வலயத்தில் 04 பாடசாலைகளும் , வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளும் , 

கிளிநொச்சி 03 , மடு 01 , வவுனியா வடக்கு 02 , சாவகச்சேரி 03 பாடசாலைகளும் கோரப்பட்டுள்ளது.இதேபோன்று வடமராட்சியில் 10 பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதோடு தீவகம், வலிகாமம் கல்வி வலயங்களிலும் 

பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சில் மட்ட தகவல்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு