ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் எல்லோரும் வெளியில் நடமாட முடியாது..! மக்களே அவதானம், அடையாள அட்டையில் 3, 4 இருந்தால் நாளை நடமாடலாம்..
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, ஹம்பகா, க ளுத்துறை, புத்தளம் ஆகிய அபாய வலயங்கள் தவிர்ந்த மிகுதி 21 மாவட்டங்களிலும் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவிருக்கின்றது.
நாளை அதிகாலை 5 மணிக்கு தளத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் அத்தியாவசிய தேவை மற்றும் தொழில் நிலையங்களுக்கு செல்பவர்களைத்
தவிர ஏனையவர்கள் தங்களது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரமே பயணிக்க முடியும்.அதற்கமைய திங்கட்கிழமை 1,2 என்ற இறுதி இலக்கம் அமையப் பெற்றவர்களுக்கும் , செவ்வாய்கிழமை 3 அல்லது 4 என்ற
இலக்கத்தை கொண்வடர்களும் புதன்கிழமை 5 அல்லது 6 என்ற இலக்கத்தினரும் , வியாழக்கிழமை 7 அல்லது 8 என்ற இறுதி இலக்கத்தைக் கொண்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ,
வெள்ளிக்கிழமை 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்களுமே இவ்வாறு வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை வைரஸ் தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா,
களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் மக்கள் செயற்படவேண்டிய இந்த புதிய பொறிமுறையை மே 04 ஆம் திகதி அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்களில்
முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வலையத்தளங்களில் இடம்பெற்ற 9 விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர்
இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் சிவில் சட்ட விதிகளுக்கு அமைவாக 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள்
மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல்,
சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக் கச்சேரிகளை நடத்துதல் முதலானவை தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு வெயல்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.