SuperTopAds

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்..! மக்களே அவதானம், பொலிஸார் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்..! மக்களே அவதானம், பொலிஸார் எச்சரிக்கை..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை இறுக்க மாக பேணும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் கைது செய்வோம். என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கூறியுள்ளார். 

ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க பொறிமுறை சட்டம் அல்ல, அறிவுறுத்தலாகும். அதனை இணங்கத் தவறியதற்காக யாரும் கைது செய்யப்படமாட்டார்கள். 

ஆனால் இந்தப் பொறிமுறையை பின்பற்றி அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார். கொரோன அபாயமுள்ள வலயங்களான கொழும்பு கம்பஹா, களுத்துறை, 

புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்ப்படு்ம் என பிரதிப் பொலிஸ் மா அஜித் ரோகண தெரிவித்தார்.