SuperTopAds

தேசிய கல்வியற் கல்லுாரிக்கு மேலதிகமாக யாழ்.மாவட்டத்தில் 2 பாடசாலைகளை கேட்கிறது இராணுவம்..! வடமாகாணத்தில் 5 பாடசாலைகளை கேட்கிறது..

ஆசிரியர் - Editor I
தேசிய கல்வியற் கல்லுாரிக்கு மேலதிகமாக யாழ்.மாவட்டத்தில் 2 பாடசாலைகளை கேட்கிறது இராணுவம்..! வடமாகாணத்தில் 5 பாடசாலைகளை கேட்கிறது..

இலங்கை இராணுவத்திற்குள் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அது குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் விடுமுறையில் வீடு சென்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்காக யாழ்.மாவட்டத்தில் இரு பாடசாலைகளை தமக்கு வழங்குமாறு மாகாண கல்வியமைச்சிடம் இராணுவம் கேட்டுள்ளது. 

குறித்த இரு பாடசாலைகள் உள்ளடங்கலாக வடமாகாணத்தில் 5 பாடசாலைகளை தமது கட்டுப்பாட்டில் வழங்குமாறும் அந்த பா டசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாகவும், இடைத்தங்கல் முகாம்களாகவும் மாற்றவுள்ளதாக இராணுவத்தினர் மாகா ண கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி, கைதடி பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்தில் பேசாலை பகுதியிலும், கிளிநொச்சி மா வட்டத்தில் வட்டக்கச்சி பகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒலுமடு பகுதியிலும் பாடசாலைகளை வழங்குமாறு இராணு வத்தினர் கேட்டிருக்கின்றனர். இதில் கிளிநொச்சி, மற்றும் மன்னார் 

மாவட்டங்களில் இரு பாடசாலைகள் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.