வடக்கு மாகாணத்தில் அதிகளவு தனிமைப்படுத்தல் நிலையங்களை நிறுவுவது வடக்கு மக்களுக்கே ஆபத்தானதாக மாறும்..! தடுப்பதற்கு வசதியில்லை..

ஆசிரியர் - Editor I
வடக்கு மாகாணத்தில் அதிகளவு தனிமைப்படுத்தல் நிலையங்களை நிறுவுவது வடக்கு மக்களுக்கே ஆபத்தானதாக மாறும்..! தடுப்பதற்கு வசதியில்லை..

வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான போதிய வசதிகள் அற்ற நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரிப்பது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திவிடலாம் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனானந்தாகவலை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,கொரோனாவின் தாக்கம் இலங்கையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் வடக்கிலும் அதன் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக் கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலையில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் வடக்கில் இராணுவ முகாம்களிலும் பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான நிலைமை வடக்குக்கு கொரோனா ஆபத்தை அதிகரித்துவிடலாம். 

ஆகவே குறித்த மாவட்டத்தை சோந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத் துவதே பொருத்தமானது. மேலும் மக்கள் கொரோனாபரவலில் இருந்து தம்மை பாதுகாக்க சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டியது அவசியம். 

இயன்றவரை வீடுகளிலேயே இருப்பது நன்று. ஊரடங்குத் தளர்வில் மக்கள் வெளியில் அதிகமாக செல்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு