SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் நாளை கூடவுள்ள 5 மாவட்டங்களின் இராணுவ கட்டளை அதிகாரிகள்..! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வருகிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நாளை கூடவுள்ள 5 மாவட்டங்களின் இராணுவ கட்டளை அதிகாரிகள்..! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வருகிறார்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வேலை திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பாது காப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன நாளை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் வடக்கின் ஐந்து மாவட்ட இராணுவ தளபதிகள், 

உயரதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு செயலர் யாழ்ப்பாணம் கொரோனா இடர்வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.