யாழ்.மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்போது? எவ்வாறு? உறுதியாக கூற முடியாது என்கிறார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்போது? எவ்வாறு? உறுதியாக கூற முடியாது என்கிறார் பணிப்பாளர்..

பலாலி தனிமைப்படுத்தலில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை எவ்வாறு? என்பதை உறுதியாக கூற முடியாது. என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, ஏற்கனவே தொ ற்றுக்குள்ளான 6 போிடமிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம், என கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த மாதம் 22ம், 23ம் திகதிகளில் 

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் சுவிஸ் போதக ருடன் மிக நெருக்கமாக பழகியிருந்தவர்கள். இவர்களிடம் கடந்த 1ம், 3ம் திகதிகளில் நடந்த 1ம் கட்ட பரிசோதனையில் 6 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அன்றிலிருந்து 11 நாட்கள் கழித்து 

நேற்று நடாத்தப்பட்ட பரிசோதனையின்போது 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.    இவர்களுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது? என்பதை உறுதியாக கூற முடியாது. 1ம் கட்ட பரிசோதனையின்போது தொற்றுக்குள்ளான 6 போிடமிருந்து கூட இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார். 

இதற்கிடையில் தாவடி, அரியாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்ன அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டனர்? அவர்களுக்கு அடுத்தகட்ட பரிசோதனைகள் உள்ளதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பணிப்பாளர், 

சமூக மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் 21 நாட்கள் கடந்தும் அவர்களில் இருந்து தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படவில்லை. மேலும் போதகருடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கெ தொற்று ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது. 

ஏனையவர்களுக்கு வாய்ப்புக்கள் மிக குறைவு. அதனையும் மீறி தொற்று ஏற்படலாம் என மக்கள் மத்தியில் சலனம் உள்ளது. ஆனால் அதனை எங்களால் நீக்க முடியாது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு