யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்வு மற்றும் கொரோனா தாக்கத்தின் எதிர்காலம் தொடர்பாக பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..! கைவிரித்தார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாகவும், கொரோனா தாக்கத்தின் எதிர்காலம் தொ டர்பாகவும் இப்போது எதனையும் கூற இயலாது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, 

சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கே அடையாளம் காணப்படுகின்றபோதும் நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எனவும் பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊரடங்கு தளர்வு மற்றும் தற்போதைய நிலமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சுகாதார அமைச்சு, கொரோனா எதிர்ப்பு செயலணி, உயர்நிலை சுகாதார அதிகாரிகள் போன்றவர்களாலேயே ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எட்டப்படுகின்றது. அவர்கள் எங்களுடைய கருத்துக்களை நாங்களும் கூறுகிறோம். எங்களுடைய பணி நோயாளர்களை கண்டறிவதும், சிகிச்சையளிப்பதுமே. 

மேலும் பொதுவான ஒரு நடைமுறையை அரசாங்கம் பின்பற்றுமாறு கூறினால் அதனை நாங்கள் பின்பற்றவேண்டும். ஆகவே ஊரடங்கு தளர்வு பற்றியும், நோயின் எதிர்காலம் பற்றியும் இப்போதைக்கு எதனையும் கூற இயலாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

வடமாகாணத்தில் நோயாளர் எண்ணிக்கை குறைவு மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மட்டுமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றவகையில் நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம். இனியும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு