SuperTopAds

விபத்தில் உயிரிழந்த அப்பாவி பெண்களின் நல்லடக்கத்திற்கு முன்பே பிணையில் விடுதலையான சாரதி..!

ஆசிரியர் - Admin
விபத்தில் உயிரிழந்த அப்பாவி பெண்களின் நல்லடக்கத்திற்கு முன்பே பிணையில் விடுதலையான சாரதி..!

மன்னார்- மதவாச்சி வீதியில் பரப்பங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் பலியான சம்பவத்தில் விபத்தை உண்டாக்கிய சாரதிக்கு உயிரிழந்த பெண்களின் சடலம் நல்ல டக்கம் செய்யப்பட முன்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் சாடியுள்ளனர். 

மன்னார் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பதில் நீதிவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலை யில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்ப ட்டார். இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரும், 

சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற் கொண்டதாகவும், பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிராந்திய பொலிஸ் மற்றும் பொ றுப்பதிகாரி ஆகியோர் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.