யாழ்.மாவட்டம் அபாய எல்லைக்குள்ளிருந்து வெளியேறுகிறது..! தனிமைப்படுத்தலில் உள்ள 332 பேர் நாளை மறுதினம் விடுவிக்கப்படுகின்றனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் அபாய எல்லைக்குள்ளிருந்து வெளியேறுகிறது..! தனிமைப்படுத்தலில் உள்ள 332 பேர் நாளை மறுதினம் விடுவிக்கப்படுகின்றனர்..

யாழ்.அரியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரின் ஆ ராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போி ல் 14 பேர் தவிர்ந்த மிகுதி 332 பேர் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந் து விடுவிக்கப்படவுள்ளனர். 

மேற்கண்டவாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இன்று பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், 

சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் வடமாகா ணத்தின் 5 மாவட்டங்களிலும் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 பேர் பலாலியில் தனிமை படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த 20 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ள 6 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி 14 பேர் தனிமைப்படுத் தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தகட்ட பரிசோதனைகளும் மேற்கொ ள்ளப்பட்டு ஏப்ரல் 23ம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது. 

குறித்த 14 பேர் தவிர்ந்த 332 பேருக்கும் இறுதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகி ன்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாளை மறுதினம் 13ம் திகதி அனைரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள். என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு