கப் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

ஆசிரியர் - Editor
கப் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

மன்னார் – பரப்புகண்டல் பகுதியில் இன்று நண்பகல் கப் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2  பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் வண்டியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கெப் வண்டியின் சாரதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிலங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Ads
Radio
×