வடக்குக்கு 80 மில்லியன் ஒதுக்கியது அரசு..! கொரோனா எதிர்ப்பு பணியில் வடமாகாணம் உச்ச செயல் நிலையில்..

ஆசிரியர் - Editor
வடக்குக்கு 80 மில்லியன் ஒதுக்கியது அரசு..! கொரோனா எதிர்ப்பு பணியில் வடமாகாணம் உச்ச செயல் நிலையில்..

வடக்கில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்காக 80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர், மருத் துவர் காண்டீபன், வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் கிடைக்கும் என கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனோ வைரஸ் தாக்கம் வடக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனைகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. அதனால் வைத்தியர்கள் தமது வீடுகளையும் தமது பிரச்சனைகளையும் மறந்து கடமையாற்றி வருகின்றனர். 

அதேபோல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பணியளார்களும் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு கடமையாற்றி வருகின்ற வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அங்கிகள் முதல் அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பாதுகாப்பு அங்கிகள், மாஸ்க், தொற்றுநீக்கித் திரவங்கள் அனைத்தையும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வழங்கி வருகின்றனர். இதற்குரிய நிதிகளும் முக்கியமாக சுகாதார பணிப்பாளரால் வழங்கியுள்ளதாக அறிகிறோம். குறிப்பாக 80மில்லியனுக்கு மேற்பட்ட நிதி இப்போது கைவசம் உள்ளதாகவும் 

இதனை கொரோனோ தொற்றுக்கு வடமாகாணம் முழுவதும் பயன்படுத்தமாறு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கேதீஸ்வரன் கேட்டுள்ளார். ஆகையினால் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் வைததியசாலைகளில் அங்கியோ தொற்று நீக்கி திரவமோவா மாஸ்கோ இல்லையெனில் வைத்தியசாலை பணிப்பாளரை அணுகி 

கேட்டு பெறலாம். ஏனெனில் அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனூடாக தேவையானதைப் பெற்றுக் கொண்டு சேவையில் ஈடுபடலாம் என்றார்.

Ads
Radio
×