அதிதீவிர சிகிச்சை பிரிவில் பிரிட்டன் பிரதமர்!!
கொரோனா வைரஸ் தொற்றால் வைத்திய சாலயில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.