கொள்ளைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடி..! நிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்..

ஆசிரியர் - Editor I
கொள்ளைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடி..! நிர்ணய விலையில் வடமாகாணத்திற்கு வருகிறது அத்தியாவசிய பொருட்கள்..

வடக்கே வரும் பொருள்கள் இனி விலைகள் இறங்கும்கொரோன தொற்று நோய் காரணமாக வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருள்களின் அதிகூடிய விலையேற்றத்தை தடுக்க

வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுவரப்படவுள்ளன. இது தொடர்பில் அந்தந்த மாவட்ட செயலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் பிரகாரம் 5 மாவட்டத்திற்கும் 

ஒரு லட்சத்து 55 ஆயிரம் கிலோ சீனி 117 ரூபா விலையிலும் , 

ஒரு லட்சம் கிலோ வெங்காயம் 160 ரூபா, 

ஒரு லட்சத்து 50 ஆயிரம் சமன் ரின் 100 ரூபா விலையிலும் 

ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி 98 ரூபா விலையில்   

அனுமதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் உடனடியாக.

யாழ்ப்பாணம் மாவட்டம் அரிசி 20 ஆயிரம் கிலோ , சீனி 50 ஆயிரம் கிலோ , பருப்பு 20 ஆயிரம் கிலோ எடுத்து வரும் அதேநேரம் உள்ளூர் மீனவர்களின் நன்மை கருதி மீன்ரின் எடுத்து வரப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டம் 50 ஆயிரம் மீன்ரீன் , 50 ஆயிரம் கிலோ அரிசி , 25 ஆயிரம் கிலோ சீனி , 15 ஆயிரம் கிலோ பருப்பு , பெரிய வெங்காயம் 15 ஆயிரம் கிலோ அனுமதிக்கப்பட்ட நிலையில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் ஏற்றப்படுகின்றன.

மன்னார் மாவட்டம் 25 ஆயிரம் கிலோ பருப்பு. , 25 ஆயிரம் மீன்ரின்.30 ஆயிரம் சீனி. 10 ஆயிரம் கிலோ வெங்காயம் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவை கருதி அரிசி , மீன் ரின் தவிர்த்து சீனி , பருப்பு , வெங்காயம் ஏற்றப்படுகின்றது.இதேபோன்று

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அனுமதிக்கப்பட்ட பொருட்களில் அரிசி தவிர்ந்த ஏனைய பொருட்கள் எடுத்து வரப்படுகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு