குளத்தில் மீன்பிடிக்க சென்ற 15 வயதான சிறுவன் பரிதாபகரமாக பலி..!
குளத்தில் மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் திடீரென முதலை தாக்கியதில் 15 வயதான சிறுவ ன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று மாலை வாகரை- புனானை மைலந்தனை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் உணவுக்காக மைலந்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் சிறுவனை முதலை கடித்து இழுத்து சென்றதாக இவருடன் மீன்பிடிக்க சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்.
புணாணை மைலந்தனை பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கஜேந்திரன் (வயது 15) எனும் சிறுவனே முதலை கடித்து மரணமடைந்து உள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.