யாழ்.மாவட்ட மக்களுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை..! அறிகுறிகள் தென்படாவிட்டாலும், கொரோனா தொற்றியிருக்கலாம் அவதானம்..!
கொரோனா வைரஸ் எந்தவொரு குணம் குறிகளையும் வெளிப்படுத்தாமல் உடலில் பரவியிருக்கும் தன்மை கொ ண்டது என்பதை யாழ்.மாவட்டத்தில் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பேர் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,
யாழ்.மாவட்ட மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டமை தொடர்பாக கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய 20 பேர் காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 10 போிடம் மெற்கொள்ளப்பட்ட ஆய்வுகூட பரிசோதனைகளில் 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். அவர்களுக்கு நோய் தொ ற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனாலும் நோய் தொற்றியிருக்கின்றது. இது அறிகுறிகள் தென்றபடா விட்டாலும் நோய் தொற்றியிருக்கலாம் என்பதையே காட்டுகின்றது.
எனவே மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் வழங்கியிருக்கும் ஆலோசனைகளை பின்பற்றி நடக்கவேண்டும் என அவர் மேலும் கேட்டுள்ளார்.