சக்திமான் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகும்!!
சிறுவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சக்திமான் தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள மக்களின் பொழுதுபோக்குக்கு உதவியாக தூர்தர்சனில் 1980-களில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற ராமானந்த் சாகரின் ராமாயணம், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் மற்றும் சக்திமான் தொடர்களை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதை ஏற்று கடந்த சனிக்கிழமை முதல் தூர்தர்சன் நேசனல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர், தினமும் காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஒரு எபிஷோடும், இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இன்னொரு எபிஷோடும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபிகா சிகாலியாவும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளனர். இந்த நிலையில், சக்திமான் தொடரையும் மீண்டும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும், சக்திமான் தொடரின் கதாநாயகன் முகேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.
சக்திமான் தொடர் தூர்தர்சனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.