SuperTopAds

15 வயது சிறுமி 8 மாத கர்ப்பவதி..! கொழும்பில் வசிக்கும் சிறிய தந்தையை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமி 8 மாத கர்ப்பவதி..! கொழும்பில் வசிக்கும் சிறிய தந்தையை தேடுகிறது பொலிஸ்..

15 வயதான சிறுமி ஒருவர் 8 மாதங்கள் கர்ப்பவதியான நிலையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரி களினால் மீட்கப்பட்டிருக்கின்றார். இதேவேளை சிறுமியை கர்ப்பவதியாக்கிய சிறிய தந்தையி னை பொலிஸார் தேடி வருகின்றனர். 

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்.கொழும்பில் இருக்கும் சிறியதந்தையின் வீட்டுக்கு தனது தாயுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் 

சிறுமி சென்ற நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, கர்ப்பமடைந்த சிறுமி, தனது வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.