மாதாந்தம் கிளினிக் செல்லவேண்டாம், மருந்து வீடுகளுக்கு அனுப்பபடும்..! பதிவு செய்யுங்கள், இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து..
மாதாந்தம் கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை வீட்டுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நோயாளர்கள் தமது பிரதேச வைத்திய சாலையுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்கள் தெரியாவிடின் உங்களது மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்-021 221 7278.
வவுனியா - 024 222 2893,
கிளிநொச்சி -021 228 5933,
மன்னார்- 023 222 2916
முல்லைத்தீவு- 021 229 0102
வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு நீங்கள் உங்களது பின்வரும் தகவல்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முழுப் பெயர்.
வயது,
பால்,
சிகிச்சை பெறும் வைத்தியசாலை,
சிகிச்சை பெறும் கிளினிக்,
கிளினிக் இலக்கம் (உங்கள் கிளினிக் கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்),
உங்களது தபால் முகவரி
உங்களைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம்,
உங்களது மருந்துகள் உங்களைத் தேடி உங்களது வீட்டிற்கு வரும்.