ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பே மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய வடமாகாணம்..!

ஆசிரியர் - Editor
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பே மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய வடமாகாணம்..!

3 நாட்கள் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி தொடக்கம் 2 மணிவரை தளர் த்தப்பட்டிருக்கும் நிலையில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் முக்கிய நகர் பகுதிகளில் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 84 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வாங்க

அதிகளில் கூடியிருந்தனர். இந்நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அது சாத்தியப்படாமலபோயிருக்கின்றது. 

Radio
×