கொரோனா பாதிப்பை மக்கள் உணராமல் இருப்பது பேராபத்து..! 2 வாரங்கள் அவசரமாக முடக்குங்கள், மாநகர முதல்வா் கோாிக்கை..

ஆசிரியர் - Editor I

வடமாகாணம் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை. என்பதற்காக தொற்றுக்குள்ளாகாது என கூற முடியாது. மக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுடன் இருப்பதே சிறந்தது. என யாழ்.மாந கர முதல்வா் இ.ஆனோல்ட் கூறியிருக்கின்றாா். 

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்ச நிலைய தொடா்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் ப திலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில் வடக்கில் கொரோனா நோயாளிகள் இனங்காணப்படவில்லை. 

ஆனாலும் கொரோனா வடக்கில் பரவாது என கூற முடியாது. இந்நிலையில் அறிவுறுத்தல்கள், எச்சாிக்கைகளை மீறி மக்கள் யாழ்.நகாிலும் வடக்கின் முக்கிய நகரங்களிலும் மிக சாதாரண மாகவும், அநாவசியமாகவும் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. 

எனவே மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். என கூறிய மாநகர முதல்வா், இதனை வலியுறுத்தி வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் கூறினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு