வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய இடத்தில்!!

ஆசிரியர் - Editor II
வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய இடத்தில்!!

நடிகை ஆண்ட்ரியாவெற்றிமாறனின் அடுத்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

திரில்லர் கதையம்சத்தில் உருவாக உள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் லவ்லின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 

நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன வடசென்னை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

அதேபோல் தேசிய விருது வென்ற வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் டாப்சிக்கு ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Radio