கொரோனா வைரஸ் பீதி. நோயாளியை அனுமதிக்கவிடாது எதிா்ப்பு..! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுற்றாடலில் பதற்றம், 8 போ் கைது..
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்க லாம். என்ற சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவரை அனுமதிப்பதற்கு எதிா்ப்பு தொிவித்து பொது மக்கள் எதிா்ப்பு போராட்டம் நடாத்தியதால் பதற்றம் நிலவுகின்றது.
இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உள்பட கோரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு சென்ற நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
சிகிச்சைபெறச்சென்றுள்ளார். கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் மருத்துவர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கோரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கோரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும்
இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை
ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.